Movie Name : Irumbu Kottai Murattu Singam , இரும்பு கோட்டை முரட்டு சிங்கம்
Cast: Larencce, Lakshmi Rai, Padmapriya, Sandhya, Ramesh Kanna, Manorama, Nasser, MS Baskar, Vyapuri, Delhi Ganesh, Ilavarasu
Direction: Simbhudevan
Production: Kalpathi S. Agoram
Music: G V Prakash
ஏ.ஜி.எஸ்.எண்டர்டெய்ன்மென்ட் சார்பில் கல்பாத்தி எஸ்.அகோரம் தயாரிப்பில், சிம்புதேவன் இயக்கத்தில் உருவாகும் 'கெளபாய்' படம், 'இரும்புக்கோட்டை முரட்டுச் சிங்கம்'. 'கெளபாய்' என்பது வட அமெரிக்காவின் பழைய கலாச்சாரம். இப்படத்தின் கதை, பதினெட்டாம் நூற்றாண்டில் நடக்கிறது. எனவே படத்தில் நடிக்கும் நடிகர்கள் யாருக்கும் ஒரு காட்சியில் கூட வேட்டி - சேலை போன்ற உடை கிடையாதாம். படத்தில் பங்கு பெறும் சிறிய நடிகர்களூக்கு கூட கவுன் போன்ற உடையே தயாரிக்கப்பட்டுள்ளது. வேட்டி - சேலை இல்லாத தமிழ்ப் படம் இதுவாகத்தான் இருக்க முடியும்.
மேலும் இந்தப் படத்திற்காக கதாநாயகன் ராகவா லாரன்ஸ், நாயகி லஷ்மிராய், பத்மப்ரியா, சந்தியா, சாய்குமார், இளவரசி, வையாபுரி, சாம்ஸ், எம்.எஸ்.பாஸ்கர், என ஒரு பெரிய நடிகர்கள் பட்டாளமே குதிரைப் பயிற்சி எடுத்துக் கொண்டுள்ளார்கள். இப்படத்திற்காகப் படப்பிடிப்பு நடந்ததைக் காட்டிலும், படப்பிடிப்பிற்கு ஏத்த சரியான இடங்களை தேர்ந்தெடுப்பதிலே பெரும் நாட்கள் பிடித்துள்ளதாம். இந்தியா முழுவதும் சுற்றிய 'இரும்புக்கோட்டை முரட்டுச் சிங்கம்', ஆந்திரா ராய்சூட்டி, மொத்தனூர், பெங்களூர், பூனே, நாக்பூர், பாலக்காடு, அம்பா சமுத்திரம், பாண்டிச்சேரி ஆகிய இடங்களில் சில இடங்களைத் தேர்ந்தெடுத்து படம் பிடித்துள்ளனர். விஜயநகர பேரரசின் சிதிலமடைந்த கண்டிக்கோட்டை அருகே கண்டி கால்வாயினுள் இதுவரை யாரும் போகாத அந்த இடத்திற்கு சென்றும் படம் பிடிக்கப்பட்டுள்ளது.